menu






 இலக்கியம >> பொன்மொழிகள்


பொன்மொழிகள்

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்
- காந்தியடிகள்


அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
- ஓர் அனுபவசாலி


இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். - அரவிந்தர்


கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும்
- கிளெண்டல்


என்றாவது நான் ஆசி¡¢யரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும் - டொரோதி தெலூஸி


நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை - எமர்சன்


மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் - வா¡¢யார் சுவாமிகள்


உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள் - ஜேம்ஸ் ஆலன்.


இறைவனின் தா¢சனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். - சுவாமி ராமதாஸ்.


நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள் - ஓர் அறிஞர்


மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்
- மு.வ.


நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
- ஜான்ஸன்


ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்


ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட்


நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும் - அரவிந்தர்


உலகம் எவ்வளவு பொ¢யதோ, அவ்வளவு பொ¢யதாக உங்கள் இதயத்தை வி¡¢வாக்குங்கள் - சுவாமி விவேகானந்தர்


உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது
- எமர்சன்


கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.
- பிளேட்டோ


காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். - ஷேக்ஸ்பியர்


நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி


அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான் - யாரோ


வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும் - மா¡¢யோ போஜியோ


துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான் - ஹென்றி லீவ்ஸ்


கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன் - ராபர்ட் பிராஸ்ட்